98-வது ஆஸ்கர் விருதுகள்: 6 விருதுகளை அள்ளிய ‘One Battle After Another’: 4 விருதுகளை வென்றது Sinners!

லாஸ் ஏஞ்சலஸ்: 2025-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களைக் கௌரவிக்கும் 98-வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் 2026) விழா, லாஸ் ஏஞ்சலஸில் உள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது. புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் கோனன் ஓ பிரையன் இந்த விழாவைத் தொகுத்து வழங்கினார்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாளராக பால் தாமஸ் ஆண்டர்சனின் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ (One Battle After Another) திரைப்படம் உருவெடுத்துள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குனர் உட்பட மொத்தம் 6 விருதுகளை இப்படம் அள்ளியது. அதைத் தொடர்ந்து ரையான் கூக்ளரின் ‘சின்னர்ஸ்’ (Sinners) திரைப்படம் 4 விருதுகளைக் கைப்பற்றியது.

நடிப்பு மற்றும் இயக்கம்:
இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை ‘Sinners’ படத்தில் நடித்த மைக்கேல் பி. ஜோர்டான் தட்டிச் சென்றார். சிறந்த நடிகையாக ‘Hamnet’ படத்திற்காக ஜெஸ்ஸி பக்லி தேர்வு செய்யப்பட்டார். சிறந்த இயக்குனருக்கான விருதை ‘One Battle After Another’ படத்திற்காக பால் தாமஸ் ஆண்டர்சன் வென்றார்.

துணை நடிகர்கள்:
சிறந்த துணை நடிகர்: சீன் பென் (படம்: One Battle After Another)
சிறந்த துணை நடிகை: எமி மதிகன் (படம்: Weapons)

தொழில்நுட்பம் மற்றும் பிற விருதுகள்:
சிறந்த திரைப்படம்: ஆடம் சோம்னர், சாரா மர்பி, பால் தாமஸ் ஆண்டர்சன் (One Battle After Another)
சிறந்த அனிமேஷன் படம்: KPop Demon Hunters
சிறந்த சர்வதேச படம்: சென்டிமென்டல் வேல்யூ (நார்வே)
சிறந்த இசை: லுட்விக் கோரன்சன் (Sinners)
சிறந்த பாடல்: Golden
சிறந்த ஒளிப்பதிவு: ஆட்டம் டுரால்ட் அர்காபாவ் (Sinners)
சிறந்த திரைக்கதை (Adapted): பால் தாமஸ் ஆண்டர்சன் (One Battle After Another)
சிறந்த திரைக்கதை (Original): ரியான் கூக்லர் (Sinners)
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: Avatar: Fire and Ash

இதர முக்கிய விருதுகள்:
ஆடை வடிவமைப்பு & மேக்கப்: ‘Frankenstein’ திரைப்படம் ஆடை வடிவமைப்பு மற்றும் மேக்கப் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் விருதை வென்றது.

சிறந்த சவுன்ட்: ‘F1’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

ஆவணப்படம்: ‘Mr. Nobody against Putin’ சிறந்த ஆவணப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

குறும்படங்கள்: ‘The Girl Who Cried Pearls’ (அனிமேஷன்) மற்றும் ‘The Singers’ (லைவ் ஆக்‌ஷன்) ஆகிய படங்கள் விருது பெற்றன.

‘One Battle After Another’ திரைப்படம் சிறந்த படம், இயக்குனர், படத்தொகுப்பு, காஸ்டிங் உள்ளிட்ட முக்கிய 6 பிரிவுகளில் வெற்றி பெற்று இந்த ஆண்டின் ‘மெகா ஹிட்’ ஆஸ்கர் படமாகத் திகழ்கிறது.

Related Stories: