போதை மாத்திரை விற்றவர் கைது

திருச்சி, ஜன.29: உறையூர் பகுதியில் போதை மாத்திரை விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி உறையூர் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் ஜன.27ம் தேதி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு பொது கழிப்பிடம் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், போதை மாத்திரை வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்த சுலைமான் (29) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 20 போதை மாத்திரை, ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: