‘காங்கிரசுக்கு யாரும் பூஸ்ட் தர வேண்டாம்’

அரக்கோணம்: காங்கிரஸ் கட்சிக்கு யாரும் பூஸ்ட் கொடுக்க வேண்டாம் என்று செல்வப்பெருந்தகை கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அரக்கோணத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, காங்கிரசுக்கு விஜய் பவர் கொடுக்க அழைப்பதாக அவரது தந்தை சந்திரசேகர் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு காங்கிரஸ் கட்சிக்கு யாரும் பூஸ்ட் கொடுக்க வேண்டாம். எங்கள் தலைவர் ராகுல் காந்தி பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்றவை நிறைய கொடுத்துள்ளார். தற்போது நாங்கள் உற்சாகமாக உள்ளோம். புதிய மற்றும் இளம் மாவட்ட தலைவர்களை நியமித்து கட்சிக்குள் புதிய ரத்தம் பாய்ச்சி உள்ளோம். குறிப்பாக இதில் 4 பெண்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று காட்டமாக தெரிவித்தார்.

Related Stories: