ஜெயங்கொண்டம், ஜன.21: ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 10,11,12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வை வெல்வோம் வினா விடை வழிகாட்டி நூல் சிவசங்கர் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிவசங்கர் கல்வி அறக்கட்டளை சார்பில் தேர்வை வெல்வோம் வினா-விடை வழிகாட்டி நூல் வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் நகர்மன்றத் துணைத் தலைவர், நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நகர துணை செயலாளர் குமார், வார்டு செயலாளர் வெற்றி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு நூல்களை வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார், உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.
