கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர்கோயிலில் மயங்கி விழுந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி

ஜெயங்கொண்டம், ஜன.21: கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி மயங்கி விழுந்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு, லண்டனைச் சேர்ந்த ஹக் (72), அவரது மனைவி எமிலி (70), இருவரும் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். நேற்று புதுச்சேரியில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கோயிலின் உட்பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது ஹக் திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவர் வெங்கடேசன் உள்ளிட்ட செவிலியர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: