நியூயார்க்: சர்வதேச மோதல்களைக் கையாள்வதில் ஐ.நா சபை செயலிழந்து காணப்படுவதால், உலக மக்கள் இதனை அமைதி, பாதுகாப்பை வழங்கும் அமைப்பாகக் கருதவில்லை என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் கூறியுள்ளார். மேலும் உலகளாவிய அமைதி, நீதியை நிலைநாட்டுவதில் நிலவும் திறமையின்மை காரணமாகவே, பல நாடுகள் தற்போது மாற்று அமைப்புகளை நோக்கி நகர்வது குறித்து விவாதிக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
