பெரம்பலூர்: பெரம்பலூரில் ரவுடி அழகுராஜ் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். ரவுடி அழகுராஜ் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக சொன்ன இடத்திற்கு அழைத்துச் சென்றோம். நாட்டு வெடிகுண்டை எடுத்து தருவது போல பாவனை செய்து போலீசார் மீது வீசி தப்பிக்க முயற்சி செய்தார். அழகுராஜ் வீசிய நாட்டு வெடிகுண்டு வெடித்து காவல்துறை வாகனம் சேதமடைந்தது. ரவுடி அழகுராஜை பிடிக்க முயன்ற எஸ்.ஐ. சங்கரை ஆயுதங்களால் தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. எஸ்.ஐ.யை தாக்கிய அழகுராஜாவை மங்களமேடு ஆய்வாளர் நந்தகுமார் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்தார். மருத்துவமனையில் அழகுராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர் என்று கூறினார்.
