சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் சேகர்பாபு மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நேற்று மக்கள் நீதி கட்சித் தலைமை அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜும் கமல்ஹாசனை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மவுரியா மற்றும் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உடனிருந்தனர்.
மநீம தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர்கள் சந்திப்பு
- Maneema
- கமல்ஹாசன்
- சென்னை
- மக்கள் நீதி மாயம் கட்சி
- கமல்ஹாசன்
- சாமிநாதன்
- சேகர்பபு
- சட்டசபை
- மக்கள் நீதிக் கட்சி
- மக்கள் நீதி மெய்யாம் கட்சி
