23ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 23ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: தேமுதிக, மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 23ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தேமுதிக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: