சி.வி.சண்முகம் மீது சட்டப்படி நடவடிக்கை: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

சென்னை: நடிகை நயன்தாராவை இழிவுபடுத்தி பேசிய சி.வி.சண்முகம் மீது தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக எம்பி சி.வி.சண்முகம், பெண்கள் பாதுகாப்புக்கான ஆர்ப்பாட்டத்தில் நடிகை நயன்தாராவை இழிவுபடுத்தி பேசியுள்ளார். பெண்களை அவமதிக்கும் ஆணாதிக்க வன்மம், பொது வாழ்வின் நாகரிக எல்லைகளை முற்றிலும் மீறியுள்ளது. அரசியல் மேடைகள் பெண்களை இழிவுபடுத்தும் இடங்களாக மாற்றி சி.வி.சண்முகம், நயன்தாராவை தரக்குறைவாக பேசியதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்தி மாண்பையும், கண்ணியத்தையும் சிதைப்பது சி.வி.சண்முகத்தின் ஆணாதிக்க மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட பேச்சுகள், பொதுவாழ்வில் பங்கேற்கும் பெண்களை கடுமையாக காயப்படுத்தி வெளியேற்றும் நோக்கம் கொண்டதாகும். பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சி.வி.சண்முகம் மீது தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: