சென்னை: செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
