ராயக்கோட்டை : ராயக்கோட்டையில் விளைச்சலாகும் அவரைக்காய் மற்றும் முள்ளங்கி சிங்கபூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ராயக்கோட்டை பகுதியில் விளைச்சலாகும் காய்கறிகள் தரமானதாக இருப்பதால் மாநிலம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
ராயக்கோட்டையில் விளைச்சலாகும் முட்டைக்கோஸ், காலிபிளவர், முருங்கைக்காய், கோவைக்காய், சேணைக்கிழங்கு, பீட்ரூட், நிலக்கடலை, பச்சைமிளகாய் போன்றவைகளுடன் முள்ளங்கி மற்றும் அவரைக்காய் சிங்கபூர், மலேசியா மற்றும் மாலத்தீவு போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ராயக்கோட்டை பகுதியில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் காய்கறிகள் சாகுபடியாகும் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று தரமானதை பறித்து வந்து அதை சுத்தம் செய்து, முள்ளங்கி போன்றவற்றை பாலிதீன் பேப்பரில் சுற்றி அட்டைப்பெட்டிகளில் அடுக்கி அனுப்புகின்றனர். அவரைக்காய் மற்றும் கோவைக்காயை சுத்தப்படுத்தி பாலிதீன் பேப்பரை அட்டைப்பெட்டியில் வைத்து அதில் கொட்டி பேக் செய்து அனுப்புகின்றனர்.
