சண்டிகர்: பஞ்சாபின் பதேகட் சாஹிப் மாவட்டத்தில் உளள் சிர்ஹிந்த் நிலையத்திற்கு அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் ரயிலின் லோகோபைலட் காயமடைந்தார். தண்டவாளத்தின் ஒரு பகுதியும், ரயில் இன்ஜினும் சேதமடைந்தது.
இது குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில்,\\” வெள்ளியன்று இரவு 9.50 மணியளவில் சரக்கு ரயில் சிர்ஹிந்த் நிலையத்தில் இருந்து 4-5கி.மீ. தொலைவில் உள்ள கான்பூர் கிராமத்தின் வழியாக வரும்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இது சரக்கு ரயில்களுக்காக ஒதுக்கப்பட்ட தடமாகும் \” என்றனர். நாசவேலைக்கு காரணமானவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
