புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து திரும்பிய தம்பதியினர் டெல்லியின் கிரேட்டர கைலாஷில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 77வயதான மூதாட்டிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், அவர் பயன்படுத்தும் சிம்கார்டு பணமோசடி வழக்கில் தொடர்புடையதாக கூறியிருக்கிறார்.
பின்னர் மோசடி நபர்கள் சிபிஐ மற்றும் காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து அந்த மூதாட்டியிடம் வீடியோ அழைப்புகளில் தொடர்பு கொண்டுள்ளனர். அவரும், கணவரும் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யாருடனும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் மிரட்டப்பட்டுள்ளனர்.
பின்னர் அச்சுறுத்தல் மற்றும் கட்டாயத்தின்பேரில் அவர்கள் தங்களிடம் இருந்து பணத்தை மோசடி நபர்களின் கணக்கிற்கு மாற்றியுள்ளனர். 8 பரிவர்த்தனைகள் மூலமாக சுமார் ரூ.14கோடி மாற்றப்பட்டுள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்த அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் குஜராத், உபி மற்றும் ஒடிசாவை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
