பள்ளி கல்வித்துறை சார்பில் டேக்வாண்டா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

ஊட்டி, ஜன. 24: பள்ளி கல்வித்துறை சார்பில் டேக்வாண்டா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான டேக்வாண்டா போட்டிகள் மதுரை மாவட்டத்தில் நடந்தது. இதில் 14, 17 வயதிற்குட்பட்ட பல்வேறு பிரிவுகளில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 20 எடை பிரிவு இறுதி போட்டியில் மதுரை மாவட்டம் மற்றும் நீலகிரி மாவட்டதை சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் எச்ஆர்எம் மெட்ரிக் பள்ளியை சார்ந்த மாணவி கிருஷிகா வெற்றி பெற்று நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மனைவிக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவிக்கு நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, உடற்கல்வி ஆய்வாளர் பெரியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் அனைவரும் பாராட்டினர்.

 

Related Stories: