கோடை சீசனையொட்டி படகுகளில் பழுதுகளை நீக்கி தயார் செய்யும் பணி துவக்கம்

 

ஊட்டி,மார்ச்11: கோடை சீசனையொட்டி ஊட்டி படகு இல்லத்தில் உள்ள படகுகளில் உள்ள பழுதுகளை நீக்கி தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
ஊட்டி மத்திய பஸ் நிலையத்திற்கு பின்புறம் ஊட்டி ஏரி அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஏரி ஆரம்ப காலத்தில் குடிநீர் பயன்பாட்டிற்கு பயன்பாட்டு வந்தது. காலபோக்கில் கழிவுநீர் கலந்ததால் ஏரி நீர் மாசடைந்தது. தற்போது இந்த ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுபாட்டில் உள்ள படகு இல்லத்தில் இருந்து படகு சவாரி மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யாமல் செல்வதில்லை.

Related Stories: