பந்தலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சமத்துவ நோன்பு திறப்பு நிகழ்ச்சி

 

பந்தலூர், மார்ச் 10: பந்தலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.நெல்லியாளம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பந்தலூர் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நெல்லியாளம் நகர தலைவர் ஷாஜி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கோசி பேபி, மாநில செயலாளர் அனஸ் எடாலத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் நாகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து வாக்காளர் பட்டியலை நிர்வாகிகளுக்கு வழங்கினார். கூட்டத்தில், கூடலூர் நகர்மன்ற துணை தலைவர் சிவராஜ், நிர்வாகிகள் சலிவயல் ஷாஜி, அஸ்பெக், நவுசாத், வழக்கறிஞர் சனூஜ், குறியகோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் தொடர்ந்து சமத்துவ நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related Stories: