டிரம்ப் தலையீட்டால் 800 மரண தண்டனை நிறுத்தமா? ஈரான் தலைமை வழக்கறிஞர் மறுப்பு

துபாய்: ஈரானில் போராட்டத்தில் கைதான 800 பேருக்கு ஈரான் மரண தண்டனை விதிப்பதாக செய்திகள் பரவின. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தலையீட்டின் பேரில் 800 பேரின் மரண தண்டனையை ஈரான் நிறுத்திவிட்டதாக தெரிவித்திருந்தார்.

அதிபர் டிரம்பின் இந்த கூற்றை ஈரானின் தலைமை வழக்கறிஞர் முகமது மொஹாவேதி மறுத்துள்ளார். இந்த கூற்று முற்றிலும் பொய்யானது. அப்படிப்பட்ட எந்த எண்ணிக்கையும் இல்லை. நீதித்துறையும் அப்படி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றார்.

Related Stories: