சப்ளை பாதிப்பு, விலை அதிகரிப்பை தணிக்க ரஷ்ய எண்ணெய் வாங்குமாறு இந்தியாவை அறிவுறுத்தினோம்: அமெரிக்க எரிசக்தி அமைச்சர் தகவல்

நியூயார்க்: ஈரான் போரைத் தொடர்ந்து 30 நாட்களுக்கு ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்த விவகாரம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் சிஎன்என் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியா எங்களின் சிறந்த பங்காளியாக இருந்து வருகிறது. இதனால், நமது கருவூல அமைச்சர் பெசன்ட்டுடன் சேர்ந்து நானும் இந்தியர்களை தொடர்பு கொண்டேன். சீன சுத்திகரிப்பு நிலையங்களில் இறக்குவதற்காக கடலில் ஏராளமான ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பலில் காத்திருக்கிறது. இவற்றை சீனாவில் இறக்க 6 வாரங்கள் காத்திருப்பதற்கு பதிலாக அந்த எண்ணெயை வாங்குமாறு இந்தியாவுக்கு அனுமதி அளித்தோம். ஈரான் போருக்கு மத்தியில் இது விநியோக அச்சுறுத்தல்கள் மற்றும் விலை அதிகரிப்பை தணிக்க உதவும். ஆனாலும், ரஷ்யா மீதான அமெரிக்க கொள்கையில் சிறிதும் மாற்றம் இல்லை. இது குறுகிய கால நடைமுறை மட்டுமே. இந்தியாவும் இதில் தெளிவாக உள்ளது. அனைத்து ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகளையும் இந்தியா நிறுத்தி விட்டது. அமெரிக்கா, வெனிசுலா மற்றும் பிற நாடுகளில் இருந்து அதன் இறக்குமதியை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: