கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பதற்றம் காரணமாக நாள்தோறும் மூன்று முதல் நான்கு பேர் தற்கொலை செய்து கொள்வதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் நடந்த சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய முதல்வர் மம்தா, \\” மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி குறித்த பதற்றம் காரணமாக ஏற்கனவே 110க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். இந்த பதற்றம் காரணமாக நாள்தோறும் மூன்று முதல் நான்கு பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேற்கு வங்கத்திற்கு எதிராக பாஜ சதி செய்கிறது. மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திர போஸ் , பி.ஆர். அம்பேத்கர் போன்ற நாட்டின் சின்னங்கள் அவமதிக்கப்படுகின்றனர்\\” என்றார்.
