புதுடெல்லி: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் ரபேல் மற்றும் எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு இடம் பெற உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. டெல்லி கடமை பாதையில் இதற்கான அணி வகுப்பு நடைபெறும்.
அதில் ரபேல், எஸ்-400, பிரம்மோஸ் ஏவுகணை, இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் ஆப் சிந்தூர் அலங்கார ஊர்தி, எஸ்யு-30 எம்கேஐ, ராணுவத்தின் எம்777 அல்ட்ரா-லைட் ஹோவிட்சர்கள் உள்ளிட்டவை இடம் பெற உள்ளன. இந்த தகவலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
