கர்நாடகாவில் பைக் டாக்‌ஸி இயக்க அனுமதி: தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: மாநிலத்தில் பைக் டாக்ஸி பயன்படுத்த மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து ஓலா, ஊபர் உள்ளிட்ட அக்ரிகெட்டர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரணை நடத்திய ஒருநபர் நீதிமன்றம், அரசின் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை எதிர்த்து மேற்கண்ட நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், மாநிலத்தில் பைக் டாக்ஸி இயங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விதிகளை வகுக்கவில்லை என்றும், அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அல்லது இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாகவோ அல்லது ஒப்பந்த வண்டிகளாகவோ பயன்படுத்த முடியாது என்ற காரணத்திற்காக அனுமதி மறுக்கப்பட முடியாது. மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நிபந்தனைகளை விதிக்கலாம்.

மக்களின் அவசர தேவைக்கு பைக் டாக்ஸியின் தேவை அவசியமாக உள்ளது. ஆகவே பைக் டாக்ஸி சேவைக்கு மாநில அரசு விதித்துள்ள தடை சரியல்ல. ஆகவே அரசின் உத்தரவை நியாயப்படுத்தி கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் ரத்து செய்கிறோம். பைக் டாக்ஸி உரிமையாளர்கள் சேவை தொடங்க அனுமதி வழங்ககோரி சம்மந்தப்பட்ட போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: