காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு அனைத்து விமானங்களும் ரத்து: சுற்றுலா பயணிகள் தவிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் சீரற்ற வானிலை காரணமாக போக்குவரத்து அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தது. நேற்று ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக சுமார் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பிரதான சாலையான ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இது தவிர முக்கிய வழித்தடங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் பனி படர்ந்துள்ளதால் பனிஹால் முதல் பாரமுல்லா வரையிலான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் காஷ்மீரில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகள் தவித்த நிலையில் உள்ளனர்.

Related Stories: