பெங்களூரு கர்நாடகாவில் பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாதவிடாய் விடுப்புக்கு ஆண் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதாகவும், ஊழியர்களிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் புலம்புகின்றனர். விடுமுறைக் கொள்கையை மறுபரிசீலனை செய்து விரிவான ஆய்வு நடத்த நிதித்துறைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மாநில நெறிமுறைத் துறையின் துணைச் செயலாளர் பனடா ரங்கையா தலைமையில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், ‘முறையான ஆய்வு நடத்தாமல் மாதவிடாய் விடுப்பை அமல்படுத்துவது தவறு. பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு கூடுதல் விடுப்பு வழங்குவது ஆண் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதாக ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இது ஆண் மற்றும் பெண் ஊழியர்களிடையே பகைமையை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். விடுப்பு காரணமாக வேலை நிலுவையில் இருப்பதாகவும், மேலும் இந்த அழுத்தம் ஆண் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, பெண் ஊழியர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஆண் மற்றும் பெண் ஊழியர்களின் பணிச்சுமையை சமநிலைப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதம் கேட்டுக்கொள்கிறது.
