புடினுடன் டிரம்பின் சிறப்பு தூதர் சந்திப்பு

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்பு தூதர் இன்று சந்திக்கிறார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில், உக்ரைனுக்கான சிறப்பு தூதர் கிரில் டிமிட்ரியேவ், அதிபர் டிரம்பின் சிறப்பு தூதர் விட்காப் மற்றும் அதிபர் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் டிரம்பின் சிறப்பு தூதர் விட்காப் ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்காக மாஸ்கோ செல்கின்றார். இன்று இவர்களின் சந்திப்பு நடைபெற உள்ளதாக ரஷ்ய அதிபரின் நிகழ்ச்சி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாஸ்கோ செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

Related Stories: