நியூயார்க்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்.இவருடைய மனைவி உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு இவான் ( 8), விவேக் ( 5) மற்றும் மிராபெல் ( 4) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்,உஷா வான்ஸ் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்து ஜே.டி.வான்ஸ் கூறுகையில், உஷாவுக்கு 4-வது ஒரு குழந்தை பிறக்க உள்ளது.
அவன் பையனாக இருப்பான். ஜூலை மாத இறுதியில் அவனை வரவேற்க காத்திருக்கிறோம் என்றார். கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜே.டி. வான்ஸ், பிறப்பு விகிதங்கள் சரிந்து வருவதால் அமெரிக்கர்கள் அதிக அளவில் குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
