டெல்லி : ராணுவ வலிமையை தேவையான நேரத்தில் பயன்படுத்த துணிச்சல் இருக்க வேண்டும் என்று புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஒரு நாட்டின் தேசிய சக்தியில் ராணுவ பலமே முதன்மையானது. பலமான ராணுவம் இல்லையெனில் வெனிசுலா, ஈராக் நாடுகளுக்கு நேர்ந்தது போல எந்தவொரு நாட்டுக்கும் நேரிடும்.வெறும் ராணுவ வலிமை மட்டும் போதாது, அதைத் தேவையான நேரத்தில் பயன்படுத்தும் துணிச்சலும் இருக்க வேண்டும்,” இவ்வாறு தெரிவித்தார்.
