மேற்குவங்கத்தில் 2 கட்டமாக தேர்தல்

 

மேற்குவங்கத்தில் 2021ல் சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடத்தி இழுத்தடிக்கப்பட்டது. அப்போது இது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த முறை தேர்தலை ஒரு கட்டம் அல்லது இரண்டு கட்டமாக நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் அமர்வு முன்பு கோரிக்கை வைத்துள்ளனர். ஏன் பா.ஜ கூட எங்களுக்கு ஒரு கட்டம் அல்லது 2 கட்டமாக தேர்தல் போதும் என்று மனு கொடுத்துள்ளது. ஏனெனில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன.

இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த முறை மேற்குவங்கத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், மேற்குவங்கத்தில் இந்த முறை 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று மூத்த தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளார். தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலங்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஆய்வை நடத்தி முடித்து உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள குறிப்பிடத்தக்கது.

Related Stories: