சென்னை: மக்கள் விரும்பு நல்லாட்சியை உருவாக்க தேசிய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் காலை 10 மணிக்கு அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்ததை அடுத்து டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிக்கு நல்லதொரு ஆட்சிகான தொடக்கத்தை நோக்கி, அதில் நாங்களும் பங்கேற்பதற்காக மக்கள் விரும்பும் ஒரு நல்லாட்சியை உருவாக்குவதற்கான முயற்சிக்கு நாங்களும் உறுதுணையாக இருப்பதற்கான எங்கள் ஆதரவை தெரிவிக்க செல்கிறோம்.
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான்.
‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.’
என நான் ஏற்கெனவே பொதுக்குழுவில் கூறினேன். நாம் பழைய விஷயங்களை நினைத்துக்கொண்டு கட்சி நலனையும், தமிழ்நாட்டின் நலனையும் பின்னுக்கு தள்ளிவிடக்கூடாது என்கிற ஒரு நோக்கத்தோடு கூட்டணிக்கு செல்கிறோம். எல்லாவற்றையும் இணைக்கு சக்தியாகிய அம்மா வின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில் திரண்டு மீண்டும் தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சிவருவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதே எங்கள் நிலைப்பாடு என கூறியுள்ளார்.
