ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து அதிமுக – பாஜக கூட்டணியில் முறைப்படி இணைந்தார் டிடிவி. தினகரன்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் நட்சத்திர விடுதியில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து அதிமுக – பாஜக கூட்டணியில் முறைப்படி இணைந்தார் டிடிவி. தினகரன். கூட்டணிக்கு தலைமை என கூறும் எடப்பாடி பழனிசாமி இல்லாமலேயே அதிமுக – பாஜக கூட்டணியில் அமமுக இணைந்தது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பியூஷ் கோயல், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அதிமுக – பாஜக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி சேரும் நிகழ்வில் எடப்பாடி இல்லாமலேயே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதிமுகவில் இருந்து தன்னை மோசடியாக நீக்கியதாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு 420 என்றும் தினகரன் விமர்சித்தார். இதனை அடுத்து 420 என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் டிடிவி தினகரன்தான் என்று அப்போதே பதிலடி கொடுத்தார் பழனிசாமி.

துரோகத்துக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் எடப்பாடிக்கு தர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறிவந்தார், எடப்பாடியை தொடர்ந்து டிடிவி கடுமையாக விமர்சித்து வந்தபோதும், தே.ஜ. கூட்டணியில் இணைய வேண்டும் என பாஜக நிர்பந்தித்தது. பாஜக நிர்பந்தம் காரணமாகவே எடப்பாடி எதிர்ப்பை கைவிட்டு தே.ஜ. கூட்டணியில் தினகரன் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி சென்று அமித்ஷாவை ரகசியமாக சந்தித்து திரும்பிய நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைவதாக பேட்டியளித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இருந்து விலகி டிடிவி தினகரன் மீண்டும் அக்கூட்டணியில் இணைகிறார்.

Related Stories: