ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை; ஆளுநர் உரையின்றி பேரவை தொடர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆண்டும், தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிக்காமல் வெளியேறினார். அப்போது சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ வெளியானது. அதில்; ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்பதை விலக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். ஆளுநர் உரையை விலக்கும் நடைமுறையை கொண்டு வர அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்தியா முழுவதும் இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநர் உரையை படிக்காதது ஒரு நாள் செய்தியாக இதை கடந்துவிட முடியாது: ஆளுநர் சொந்த கருத்தை தெரிவிக்க உரிமை இல்லை. ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்பதை விலக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என அண்ணா கூறியிருந்தார். ஆளுநர் வேண்டுமென்றே அரசமைப்பு சட்டத்தை மீறிய செயலை செய்துள்ளார். அண்ணா, கலைஞர் வழியில் இருந்து நானும் விலகியதில்லை. ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஆளுநர் ஏற்கனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் நடந்து கொண்டது வருத்தத்துக்குரியது. ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். பொது மேடையில் அவதூறு பேசி வருகிறார் ஆளுநர். சட்டப்பேரவை மாண்பை பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ளது என்று கூறினார்.

Related Stories: