வரும் 23ம் தேதி பிரதமர் மோடி வருகை: மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

 

சென்னை: வரும் 23ம் தேதி பிரதமர் மோடி வருகையால் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் Red Zone-ஆக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிகப்பெரிய அளவில் நடத்தப்பட உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கூட்டணிக் கட்சி தலைவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் Red Zone-ஆக அறிவிக்கப்பட்டுள்ளன. டிரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள், ஹாட் ஏர் பலூன்கள் உள்ளிட்டவற்றை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளன. 23ம் தேதி பிரதமருடன் பொதுக்கூட்ட மேடையில் கூட்டணியில் இடம்பெறும் தலைவர்களையும் பங்கேற்க வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. 22ஆம் தேதிக்குள் கூட்டணியை இறுதி செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில்; நாளை சென்னை வரும் பியூஸ் கோயல் தேமுதிக தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியுள்ளது. டிடிவி தினகரனையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: