விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்று வழகில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு: உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விசாரணை தொடங்கும்: சென்னை உயர்நீதிமன்றம்

 

சென்னை: ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆஜரானார்கள். சென்சார் போர்டு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார்கள். கடந்த 6ம் தேதி இந்த வழக்கு தொடரும் போதே, இந்த படம் மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது என்பது பட நிறுவனத்துக்கு தெரியும். ஆனால் அவர்கள் அதை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என்று சென்சார் போர்டு வாதம் செய்துள்ளது.

படத்தில் 14 காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதன்பின் படத்தை மீண்டும் பார்த்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 14 காட்சிகளை நீக்கி விட்டதால் சென்சார் சான்று வழங்கக் கோரினார்கள்.

டிச.22ல் தயாரிப்பாளருக்கு கடிதத்தை அனுப்பியது வாரியமா? அல்லது குழுவா; ஜனநாயகன் படத்தை பார்த்தது தணிக்கை குழுவா? வாரிய உறுப்பினர்களா? தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். ஜனநாயகன் படத்தை தணிக்கை குழுவே பார்த்ததாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எல்.சுந்தரேசன் பதில் அளித்துள்ளார்.

சினிமாட்டோகிராஃப் விதிகளின்படி, வாரியமே ஒரு படத்தைப் பார்த்து சான்றிதழைப் பரிந்துரைக்கலாம் அல்லது படத்தைப் பார்க்கும் பணியை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பலாம். ஜனநாயகன் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது

தணிக்கை வாரிய மண்டல அலுவலகம் சென்னையில் உள்ளது; சான்றை நிறுத்தி வைக்கும் முடிவு எங்கிருந்து வந்தது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். தணிக்கை சான்றிதழை நிறுத்தி வைக்கும் முடிவு மும்பை அலுவலகத்தில் இருந்து வந்ததாக தணிக்கை வாரியம் பதில் அளித்துள்ளார். தணிக்கை குழு பரிந்துரை அளித்ததும் சான்றிதழ் கொடுப்பதா? இல்லையா? என்பதை வாரியம்தான் முடிவு செய்யும்.

படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து தணிக்கை வாரியம்தான் இறுதி முடிவு அறிவிக்கும். மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் குழுவின் முடிவுகள், தணிக்கை வாரியத்தை கட்டுபடுத்தாது. சினிமோட்டோகிராபி சட்டப்படியும், விதிகளின்படியும் 72 நிமிடங்களுக்கு மேல் நீளமான படமாக இருந்தால் சென்சார் போர்டு தலைவர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று சென்சார் போர்டு வாதம் செய்து வருகிறது.

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது குறித்து வாரிய தலைவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தணிக்கை வாரியம் கூறியுள்ளது. ஜனநாயகன் வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி ஒரே நாளில் முடிவு எடுத்துள்ளார் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க தனி நீதிபதி குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். படத்தை 9ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், 500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது என்று சென்சார் போர்டு வாதம் செய்துள்ளது. ஜனவரி 6ம் தேதியில் சென்சார் போர்டு தலைவர் பிறப்பித்த முடிவையும், தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். ஆனால் தயாரிப்பாளர் அந்த கோரிக்கையையே முன்வைக்கவில்லை. இரு தரப்பு வாதங்களும் நிறைவு செய்தது. உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விசாரணை தொடங்கும்.

Related Stories: