கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே ஆண்டவர்மலையைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக மாணவர் அணி இணைச்செயலாளராக உள்ளார். விவசாயி ஆன கோபிநாத் தனது பாதுகாப்பிற்காக உரிமம் பெற்ற இரட்டை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே போதைக்கு அடிமையான கோபிநாத் தினமும் இரவில் மது அருந்திவிட்டு மனைவிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
நேற்று இரவும் வழக்கம் போல் போதையில் மனைவிடம் தகராறு செய்யவே தொடர்ந்து கணவனின் தொல்லை தாங்க முடியாத நிலையில் மனைவி பிரிந்தா பவானி சாகர் அருகே இரங்காட்டில் உள்ள தனது தந்தை வேலுச்சாமி மற்றும் தம்பி தினேஷ்குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த வேலுச்சாமி மற்றும் தினேஷ்குமார் இது குறித்து கேட்டுள்ளனர். தொடர்ந்து இதுபோல் தகராறு செய்வதை நிறுத்திகொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனால் ஆதிரமடைந்த கோபிநாத் வீட்டிற்குள் சென்று உள்ளே வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து மாமனார் மற்றும் மைதுனரை மிரட்டியுள்ளார். இருவரும் பயந்து வீட்டிற்குள் செல்லவே ஆதிரமடைந்த கோபிநாத் வானத்தை நோக்கி 3 முறை சூட்டுள்ளார். இதனை கோபிநாத் மைத்துனர் தினேஷ்குமார் நந்தியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நள்ளிரவில் கோபிநாத்தை கைது செய்து, அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
