கண்ணூர், ஆலப்புழா பகுதிகளில் காகம், கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிட்டி பகுதியிலும் மற்றும் ஆலப்புழா மாவட்டம் முகம்மா, கோடம்துருத்து பகுதிகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏராளமான காகங்கள் திடீர், திடீரென செத்து விழுந்தன. இதுகுறித்து அறிந்த கால்நடை பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த காகங்களின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக புனேவிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் செத்த காகங்களுக்கு எச் 1 என் 1 பறவைக்காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதேபோல் கோட்டயம் மாவட்டம் காஞ்சிரப்பள்ளி பகுதியில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் எர்ணாகுளம் மாவட்டத்தில் ராமமங்கலம் பகுதியில் புலம் பெயர்ந்து செல்லும் பறவைகளுக்கும் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காகங்கள் மற்றும் புலம்பெயர்ந்து செல்லும் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வருவது சற்று ஆபத்தானது என்றும் அவற்றுக்கு பரவி வரும் நோயை கட்டுப்படுத்துவது சிக்கலான காரியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: