டெல்லி : இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “எர்ணாகுளம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் நாளை, மார்ச் 11 அன்று, நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கேரளம் மற்றும் தமிழ்நாட்டிற்கு செல்வதை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். திருச்சிராப்பள்ளியில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலைகள், ரயில்வே மற்றும் பல துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை நாளை நான் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
