மகளிர் இடஒதுக்கீடு சட்டம் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக அமலாக வாய்ப்பு: ஒன்றிய அரசு ஆய்வு

புதுடெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாகவே மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஒன்றிய அரசு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது. இதை அமல்படுத்தும் வகையில், கடந்த 2023ம் ஆண்டு அரசியலமைப்பு 106வது திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதைத் தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகே மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாகவே இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியிருந்தனர். அதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஒன்றிய அரசு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக மகளிர் ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மீண்டும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: