அகமதாபாத்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.1 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்ததை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இதன் காரணமாக சிறிது நேரம் பதற்றமான சூழல் உருவானது.
