திரிணாமுல் எம்பி மம்தா தாகூருக்கு எதிராக உரிமை மீறல் குழு விசாரணை

 

புதுடெல்லி: மாநிலங்களவையில் திரிணாமுல் எம்பி மம்தா தாகூர் மற்றும் முன்னாள் எம்பி மவுசம் நூர் சிறப்புரிமையை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக உரிமை மீறல் குழு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் 18 மற்றும் 19ம் தேதி விபி ஜி ராம் ஜி மசோதா 2025 மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின்போது திரிணாமுல் எம்பி மம்தா தாகூர் மற்றும் முன்னாள் எம்பி மவுசம் நூர் ஆகியோர் அவையின் சுமூகமான செயல்பாட்டுக்கு தடைகளை ஏற்படுத்தியதாகவும், அவையின் மையப்பகுதிக்கு சென்று அவைக்கு உதவிய அதிகாரிகளுக்கு தடையை ஏற்படுத்தியதாக பா எம்பி லக்‌ஷ்மி காந்த் பாஜ்பாய் மாநிலங்களை செயலரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘விபி ஜி ராம் ஜி மசோதா விவாதத்தின்போது திரிணாமுல் எம்பி மம்தா தாகூர் மற்றும் முன்னாள் எம்பி மவுசம் நூர் ஆகியோர் நாடாளுமன்ற மரபுக்கு முரணான கருத்துக்களை தெரிவித்ததாகவும், அவை செயல்பாட்டுக்கு எதிராக தடைகளை உருவாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related Stories: