கொல்கத்தா: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று கேரளா பிளாஸ்டர்ஸ் – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. போட்டியின் 10வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திய அந்த அணியின் யூசெப் எஸெஜாரி, முதல் கோல் போட்டார். அதன் பின் முதல் பாதியில் கோல் விழவில்லை. அதைத் தொடர்ந்து நடந்த 2வது பாதியிலும் இரு அணிகளும் கோல் போட முடியவில்லை. அதனால், ஈஸ்ட் பெங்கால் வெற்றி பெறும் சூழல் காணப்பட்டது. ஆனால், ஸ்டாப்பேஜ் நேரத்தில் கேரளா அணியின் முகம்மது அஜ்ஸல், 90+2வது நிமிடத்தில் அட்டகாசமாக பந்தை கடத்திச் சென்று ஃபீல்ட் கோல் போட்டார். அதனால் 1-1 என்ற கணக்கில் அப்போட்டி டிராவில் முடிந்தது.
