திருப்புவனம், ஜன.12: திருப்புவனம் அருகே டி.ஆலங்குளம் ஊராட்சி வாவியரேந்தலில் நேற்று புதிய ரேஷன் கடை கட்டிடத்தை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் திறந்து வைத்தார். வாவியரேந்தலில் நியாயவிலைக் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. புதிய கட்டிடம் வேண்டும் என அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ. தமிழரசியிடம் சோரிக்கை வைத்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் ஒதுக்கினார். அந்த நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை நேற்று எம்.எல்.ஏ.தமிழரசி ரவிக்குமார் திறந்து வைத்து தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கம்மாள், ராஜேஷ்குமார், கூட்டுறவு சார்பதிவாளர் வித்யா, முன்னாள் ஊராட்சி தலைவர் சிங்காரவேலு, கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் கடம்ப சாமி, அச்சங்குளம் முருகன், சேகர் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
