ஸ்ரீசாரதா நிகேதன் கல்லூரியில் கலை இலக்கிய போட்டி

காரைக்குடி, ஜன.12: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கலைக்கல்லூரியில் கல்லூரி நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்த மகராஜ் அருளாசியுடன் கல்லூரியின் அனைத்து துறைகளுக்கு இடையேயான இலக்கிய போட்டிகள் நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் சிவசங்கரி ரம்யா வரவேற்றார். கல்லூரி செயலாளர் யதீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா அம்பா, யதீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா அம்பா ஆகியோர் தலைமை வகித்தனர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏஎஸ்வி ஆஷிஷ்புனியா பரிசுகளை வழங்கினார். காரைக்குடி மகரிஷி பள்ளிகுழும தலைவர் ஆர்கே.சேதுராமன் சிறப்புரையாற்றினார். பொறியாளர் தியாகராஜன் பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினார். 20க்கும் மேற்பட்ட கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: