சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் 600 பேர் ‘சூப்பர் பைக் பேரணி’

சென்னை: சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நேற்று இரவு 600க்கும் மேற்பட்ேடார் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பை வலியுறுத்தி ‘சூப்பர் பைக் பேரணி’யில் ஈடுபட்டனர். இந்த பேரணியை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் எல்லையில் சாலை விபத்துகள் குறைப்பது, தொடர் விபத்துகள் நடக்கும் பகுதிகளை அடையாளம் கண்டு போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், போலீஸ் கமிஷனர் அருண் சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த போது, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகை பணமாக பெறுவது முற்றிலுமாக தடுத்தார். சென்னை முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி கேமரா மூலம் அபராதம் விதிக்கும் முறையை சென்னை முழுவதும் விரிவுபடுத்தினர். சிங்கப்பூர் மற்றும் மேலை நாடுகளில் உள்ளது போல் அதிநவீன தொழில்நுட்பத்தை சென்னை போக்குவரத்து காவல் துறையில் அறிமுகப்படுத்தினர். இது போன்று போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடித்தமைக்காக சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு ஒன்றிய அரசு சார்பில் உயரிய விருதுகளையும் போலீஸ் கமிஷனர் அருண் கூடுதல் கமிஷனராக இருந்த காலத்தில் வழங்கி கவுரவித்தது.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே போக்குவரத்து போலீசார் ஒரு வாரம் மற்றும் ஒரு மாதம் விழிப்புணர்வு செய்வது மற்றும் நடிகர்கள் மூலம் குறும் படம் வெளியிடப்பட்டு வருகிறது.அந்த வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சாலை விபத்துகள் மற்றும் உயிர் இழப்புகளை முற்றிலும் தடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி ஜனவரி 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ‘சாலை பாதுகாப்பு மாதம்’ என்ற பெயரில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் நடவடிக்கை எடுப்பது, ெஹல்மெட் அணிவது, காரில் சீட் பெல்ட் அணிவது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக கடைப்பிடிக்கும் வகையில் சென்னை பெருநகர காவல் எல்லையில் அனைத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். போக்குவரத்து தெற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு போக்குவரத்து தொடர்பாக பல்வேறு விளக்கங்களை காணொளி காட்சி மூலம் அடிக்கடி சமூக வலைத்தளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ெசய்து வருகிறார்.

அதேபோல் கிண்டி போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து உதவி கமிஷனர் கொடி செல்வம், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போக்குவரத்து போலீசார் கிண்டி ஒலிம்பியா பார்க் அருகே நேற்று ஹெல்மெட் அணிவது, சாலை விதிகளை கடைப்பிடிப்பது, குடிபோதையில் வாகனம் ஓடுவதை தடுப்பது, சிறுவர்கள் வாகனம் ஓட்டுது குற்றம் என பல்வேறு விதிமுறைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக, சென்னை அண்ணாசதுக்கம் பேருந்து நிலையம் முன்பு நேற்று இரவு 10.30 மணிக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் சென்னை மோட்டார் கிளப் உடன் இணைந்து 600 பேர் கலந்து கொண்ட ‘சூப்பர் பைக் பேரணி’ நடத்தினர்.

இந்த பேரணியை சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது, அண்ணாசதுக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, ஆர்.கே.சாலை, அண்ணா ரோட்டரி, பெரியார் சிலை, கொடிமர சாலை வழியாக சென்று நேப்பியர் பாலத்தில் முடிவடைந்தது. இந்த பேரணியில் சாலை பாதுகாப்பை உறுதி செய்து விபத்தில்லாமல் உயிர்களை பாதுகாக்கும் வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து தெற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார், போக்குவரத்து கிழக்கு மண்டல துணை கமிஷனர் மேகலினா ஐடன், தெற்கு மண்டல துணை கமிஷனர் குமார், ஆயுதப்பைட துணை கமிஷனர் ஜெயகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: