நீடாமங்கலம் அருகில் 175 ஐடிஐ மாணவர்களுக்கு மடிக்கணினி

நீடாமங்கலம், ஜன.10: நீடாமங்கலம் அருகில் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு அரசு மடி கணினி வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள நகர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்த மடி கணினி வழங்கும் திட்டத்தை 175 மாணவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், நகர் சக்கரவர்த்தி, நிர்வாகிகள் தனபால், ராமையன், சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: