பெரம்பலூர் மாவட்டத்தில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை

பெரம்பலூர், ஜன.10: பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் சில வாட்ஸ்ஆப் குழுக்கள், முகநூல் பக்கங்களில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிதாக வந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணியாதவர்கள், வாகன உரிமம் இல்லாத வண்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்வதாகவும், அபராதம் ரூபாய் 2500 செலுத்தினால் மட்டுமே வாகனங்கள் வழங்கப்படும் என்று காவல்துறையினர் கூறிவருவதாக தவறான செய்தி பரவி வருகின்றது.

இது முற்றிலும் தவறான செய்தி ஆகும். பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினால் மேற்படி எந்த ஒரு செய்தியும் வெளியிடப்படவில்லை. மேலும் இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம். மீறி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 

Related Stories: