பரமக்குடி, ஜன.10: பரமக்குடி அருகே மஞ்சக்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வெறிநாய் ஒன்று திடீரென பாய்ந்து இருவரை கடித்தது. மற்றவர்கள் ஓட முயன்ற போது, துரத்தி துரத்தி பத்துக்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறியது. இதில், இரண்டு பெண்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். 14 பேரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
