விவசாயிகள் பயிற்சி முகாம்

சிவகங்கை, ஜன.10: சிவகங்கை அருகே படமாத்தூரில் வேளாண்மைத் துறை சார்பில் உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. சிவகங்கை வேளாண்மை உதவி இயக்குநர் ரவிசங்கர் தலைமை வகித்தார். இதில் வேளாண்மைத் துறை திட்டங்கள், நெற்பயிர் பாதுகாப்பு முறைகள், விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பன்றிகளை கட்டுப்படுத்த பன்றி விரட்டி பயன்படுத்தி சேதங்களை குறைப்பது, நுண்ணீர் பாசனம், விவசாயிகளின் தனித்துவ அடையாள எண், நெல் பயிருக்குப்பின் உளுந்து சாகுபடி செய்வதால் மண் வளம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நுட்ப பயிற்சிகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன. வேளாண் அலுவலர் தர்ஷினிபிரியா, அட்மா திட்ட உதவி தொழில் மேலாளர் ராஜா மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: