ஒரத்தநாடு, ஜன.9: ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம் 175வது ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் மறு சீராய்வு பணிகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில், இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பெயர் சேர்த்தல் என அனைத்து விதமான திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
