18வயது பூர்த்தியான மாணவர்களுக்கு புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம்

பொன்னமராவதி,ஜன.9: பொன்னமராவதி பகுதியில் புதிய வாக்காளராக பதிவு செய்ய விண்ணப்ப படிவங்களை தாசில்தார் சாந்தா கல்லூரி மாணவர்களுக்கு வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர்கல்லூரியில் 18வயது பூர்த்தியான கல்லூரி மாணவர்களுக்கு புதிய வாக்காளர்சேர்க்கைக்கான படிவம் 6ஐ பொன்னமராவதி தாசில்தார்சாந்தா வழங்கினார். இதில் தேர்தல் பிரிசு துணை தாசில்தார்ராம்குமார், கல்லூரி முதல்வர்பழனியப்பன், சன்மார்க்க சபை நிர்வாகிகள்,கல்லூரிக்குழு நிர்வாகிகள்,பேராசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 

Related Stories: