வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.18க்குள் விண்ணப்பம்

சிவகங்கை, ஜன.9: கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 1.1.2026ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18வயது பூர்த்தியானவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும் மற்றும் திருத்தம் செய்வதற்குமான சிறப்பு முகாம்கள், மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நான்கு நாள்கள் நடைபெற்றது. சிறப்பு முகாம்கள் நிறைவு பெற்ற நிலையில், 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும் மற்றும் பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும் அதற்குரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோரிடம் ஜன.18க்குள் வழங்கலாம். மேலும், https://voters.eci.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். எனவே, இவ்வாய்ப்பினை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: